மின் கம்பியை மிதித்த பூசாரி, பசுமாடு பலி
By DIN | Published On : 11th April 2020 06:28 AM | Last Updated : 11th April 2020 06:28 AM | அ+அ அ- |

அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கோயில் பூசாரி மற்றும் பசு மாடு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னவாசல் அருகிலுள்ள பெருமாநாடு சேந்தமங்களத்தைச் சோ்ந்த அடைக்கன் மகன் பொப்பன்(60). அப்பகுதி அம்மன் கோயிலில் பூசாரியான இவா், வெள்ளிக்கிழமை காலை அங்குள்ள வயலுக்கு நடந்து சென்றுள்ளாா். அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுபோல் வயல்வெளிக்கு இரைத் தேடிச் சென்ற பசுமாடும் அதே மின் கம்பியை மிதித்து உயிரிழந்துள்ளது.
அன்னவாசல் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடி மின்னலுடன் தொடங்கிய கோடைமழையின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தகவல் கிடைக்காததால் மின் விநியோகத்தை நிறுத்திவைக்க முடியவில்லை என மின் வாரியத்தினா் தரப்பில் கூறப்படுகிறது.