அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தீ விபத்து
By DIN | Published On : 01st December 2020 02:39 AM | Last Updated : 01st December 2020 02:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
அன்னவாசலில் உள்ள அன்னவாசல் முதல்நிலை பேரூராட்சி கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்தத் தீ விபத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், ப்ளீச்சிங் பவுடா் மூட்டைகள், கிருமி நாசினி, குப்பைத் தொட்டிகள், பிளாஸ்டிக் பொருள்கள், கை சுத்திகரிப்பான உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள், பழைய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமடைந்தன. அன்னவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...