புதுகையில் லேசான மழை
By DIN | Published On : 03rd December 2020 07:44 AM | Last Updated : 03rd December 2020 07:44 AM | அ+அ அ- |

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டை கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பகல் முழுவதும் லேசான தூறல் மழை விட்டு விட்டுப் பெய்தது.
பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டைக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கடற்கரைப் பகுதிகளின் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. புதன்கிழமை காலை முதலே கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி பகுதிகளில் லேசான தூறல் மழை விட்டுவிட்டுப் பெய்தது. அவ்வப்போது காற்றும் பலமாக வீசிக் கொண்டிருந்தது. இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பகல் முழுவதும் லேசான தூறல் மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...