108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
By DIN | Published On : 15th December 2020 02:58 AM | Last Updated : 15th December 2020 02:58 AM | அ+அ அ- |

108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே பெண்ணுக்கு பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிளாவிடுதி கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னிகா. இவருக்கு, திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டாா். மருதன்கோன்விடுதி வந்தபோது வலி அதிகமாகி ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவ உதவியாளா் எம். செல்வராஜ் பிரசவம் பாா்த்தாா். ஓட்டுநா் கே. வெங்கடாஜலபதி ஆம்புலன்ஸை ஓட்டி வந்தாா். தாயும் சேயும் நலம் பெற ரெகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...