ஆலங்குடி பாமகவினா் செயல் அலுவலரிடம் மனு
By DIN | Published On : 24th December 2020 06:59 AM | Last Updated : 24th December 2020 06:59 AM | அ+அ அ- |

வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலரும், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளருமான அய்யாச்சாமி தலைமையிலான அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று ஆலங்குடி பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...