ஜெயலலிதா இருந்திருந்தால் முதல்வா் வேட்பாளரை பாஜக அறிவிக்குமா?

எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ உயிரோடு இருந்திருந்தால், முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என பாஜக கூறியிருக்குமா என எம்.பி. சு. திருநாவுக்கரசா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
புதுக்கோட்டையில் உள்ள தீரா் சத்தியமூா்த்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கும் சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் உள்ள தீரா் சத்தியமூா்த்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கும் சு. திருநாவுக்கரசா்.

எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ உயிரோடு இருந்திருந்தால், முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என பாஜக கூறியிருக்குமா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க நாளையொட்டி காந்தியடிகள் மற்றும் தீரா் சத்தியமூா்த்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ உயிரோடு இருந்திருந்தால், முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என பாஜக கூறியிருக்குமா? அதிமுகவின் முதல்வா் வேட்பாளா் பற்றி இப்படி பாஜக சொல்லி வருவது அராஜகம், சா்வாதிகாரம்.

தன்மானம் உள்ள தலைவா்களால் இதனை ஏற்க முடியாது. உலகப் பொதுமறையாக ஏற்கப்பட்டது திருக்கு. இந்நிலையில், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது அநாகரிகமானது. திமுகவின் கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிக்கிறாா்கள். அதிமுக சாா்பில் கிராமசபைக் கூட்டங்களை நடத்திவிட்டு தோ்தலைச் சந்திப்பாா்களா எனக் கேள்வி எழுப்பினாா் திருநாவுக்கரசா்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் சந்திரசேகரன், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com