பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு
By DIN | Published On : 30th December 2020 05:28 AM | Last Updated : 30th December 2020 05:28 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வாா்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி அழகுமலா் முன்னிலை வகித்தாா். இளம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகள் ஆகியவை குறித்து சைல்டுலைன் களப்பணியாளா் பூங்கொடி விளக்கினாா். வாா்ப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ஆரோக்கியராஜ், மற்றும் சைல்டு லைன் களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...