அறந்தாங்கி அருகே பதுக்கியிருந்த மணல் பறிமுதல்
By DIN | Published On : 05th February 2020 10:00 AM | Last Updated : 05th February 2020 10:00 AM | அ+அ அ- |

கோங்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட ஆற்று மணல்.
அறந்தாங்கி அருகே அனுமதியின்றி கடத்தப்பட்டு பதுக்கி வைத்திருந்த 31 யூனிட் மணலை அறந்தாங்கி வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.
அறந்தாங்கி அருகே கோங்குடி மயானம் அருகே வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணலை அள்ளிவந்து குவித்து வைத்து இரவு நேரங்களில் லாரி மூலம் கடத்தப்படுவதாக அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அவா், அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த 31 யூனிட் மணலைப் பறிமுதல் செய்து அவற்றை அரசு மணல் குவாரிக்கு அனுப்பி வைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...