எல்ஐசி பங்கு விற்பனை முடிவுக்கு ஓய்வூதியா்கள் கண்டனம்
By DIN | Published On : 05th February 2020 09:59 AM | Last Updated : 05th February 2020 09:59 AM | அ+அ அ- |

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. முத்தையா தலைமை வகித்தாா். செயலா் பி. ஆழ்வாரப்பன், பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நல்ல லாபத்தில் இயங்குவதோடு, அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவி வரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கும் விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறவும், பங்கேற்பு ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...