பொதுத்தோ்வு: ஆசிரியா்கள் ஆலோசனை
By DIN | Published On : 05th February 2020 10:02 AM | Last Updated : 05th February 2020 10:02 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் பொதுத்தோ்வு தொடா்பான ஆசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், கந்தா்வகோட்டை வட்டாரத்தில் உள்ள தோ்ச்சி சதவீதம் குறைவான பள்ளி ஆசிரியா்களுடன் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வெள்ளாள விடுதி தலைமையாசிரியா் அறிவுநம்பி செய்திருந்தாா். நிகழ்வில் கந்தா்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் மற்றும் வட்டார கல்வி அலுவலா் அலெக்சாண்டா் மற்றும் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...