புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு மொத்த விற்பனையில் ஈடுபட்ட வீட்டில் இருந்து லாட்டரிகள், ரூ.65 ஆயிரத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கீரமங்கலம் பகுதியைத் தலைமையிடமாக கொண்டு லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு மொத்தமாக விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, கீரமங்கலம் போலீஸாா் கீரமங்கலம் எழுமாங்கொல்லையில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கிரண் (32) லாட்டரி சீட்டுகளை மொத்த விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சுமாா் 3ஆயிரம் லாட்டரி சீட்டுகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய கிரணை தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.