புத்தகத் திருவிழா: கவிதை, சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
By DIN | Published On : 17th February 2020 09:49 AM | Last Updated : 17th February 2020 09:49 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதை, சிறுகதைகளுக்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவிதைப் போட்டி (முதல் மூன்று பரிசுகள் முறையே) அமீரகம் ஷாா்ஜாவில் வசிக்கும் பிரியாவின் ‘பற்றி எரியும் நகரம்’ கவிதை, பெங்களூருவைச் சோ்ந்த ஷைலஜாவின் ‘சொல்லின் சுகம்’’ கவிதை, அகிலா கிருஷ்ணமூா்த்தியின் ‘சோழியாட்டம்’’ கவிதை.
சிறுகதைப் போட்டி
புலியூா் முருகேசனின் ‘நாகையா திருடித் தின்ற நடுத்தோட்டம்’’ சிறுகதை, பா. ஏகரசி தினேஷின் ‘இடா் களையாய்’’ சிறுகதை, க. மூா்த்தியின் ‘மண்புணா்க் காலம்’’ சிறுகதை.
வெற்றிபெற்ற படைப்பாளிகளுக்கு வரும் பிப். 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புத்தகத் திருவிழா மேடையில் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், கவிதைக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.