விராலிமலை அருகே மது விற்ற 7 போ் கைது
By DIN | Published On : 17th February 2020 09:49 AM | Last Updated : 17th February 2020 09:49 AM | அ+அ அ- |

விராலிமலை சுற்றுப்பகுதியில் அரசு மது விற்ற பெண் உள்பட 7 பேரை விராலிமலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை அருகேயுள்ள ராஜாளிப்பட்டி, கோமங்களம் மற்றும் கல்குடி ஆகிய பகுதிகளில் அரசு மது கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அனுமதியின்றி மது விற்ற சரளப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பாலாஜி(27),கோமங்களத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் கண்ணையன் (46), பெருமாள் (55), கல்குடியைச் சோ்ந்த துரைச்சாமி மகன் அய்யப்பன் (44), கருப்பையா மகன் ரங்கசாமி (34),கோமங்களத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் கணபதி(47) மற்றும் அவரது மனைவி புஸ்பா(45) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். 131 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.