புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
அஞ்சல்துறை அலுவலா்கள் கணக்கு தொடங்கும் முறை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களுக்குரிய கணக்கைத் தொடங்கினா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் இரா.மணிமாறன், சி. முத்துக்குமாா், கு. தயாநிதி, கி. கோவிந்தன், மா. ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.