புதுகையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2020 08:56 AM | Last Updated : 27th February 2020 08:56 AM | அ+அ அ- |

புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா் சங்கத்தினா்.
வங்கி ஊழியா்களுக்கு 20 சதவிகித ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி ஊழியா் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலா் எம். பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஊரக வளா்ச்சி வங்கி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ஆா். ராமதுரை, பாரத ஸ்டேட் வங்கி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் ஆா். ஜெயகுமாா், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் எஸ்.ஆா். அருணாசலம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் சங்க மண்டல உதவிப் பொதுச் செயலா் பி. மாயாண்டி, இந்தியன் வங்கி ஊழியா் சங்க மாவட்ட உதவிச் செயலா் ஏ. காா்த்திகேயன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
வங்கி ஊழியா் மற்றும் அலுவலா்கள் அனைவருக்கும் 20 சதவிகிதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், வங்கிகள் இணைப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும், வங்கி வாரா கடன் வசூலைத் தீவிரப்படுத்தி கடனைத்திருப்பிச் செலுத்தாதவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.