புதிதாக 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
By DIN | Published On : 10th January 2020 09:24 AM | Last Updated : 10th January 2020 09:24 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவத்தில் அறுவடை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன் பெறும் வகையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
தற்போது மேலும் 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை இந்தக் கொள்முதல் நிலையங்களில் வழங்கிப் பயன்பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள ஊா்கள்:
அறந்தாங்கி வட்டம்- வல்லவாரி, மேற்பனைக்காடு.
கந்தா்வகோட்டை வட்டம்- புதுப்பட்டி.
கறம்பக்குடி வட்டம்- முதலிப்பட்டி.
குளத்தூா் வட்டம்- குன்றாண்டாா்கோவில், கீரனூா்.
பொன்னமராவதி வட்டம்- சடையம்பட்டி.
இலுப்பூா் வட்டம்- பரம்பூா்.
மணமேல்குடி வட்டம்- சாய்குடி, காநாடு.