மாநில கபடி போட்டிக்கான பயிற்சி நிறைவு
By DIN | Published On : 10th January 2020 09:19 AM | Last Updated : 10th January 2020 09:19 AM | அ+அ அ- |

திருமயத்தில், கபடி வீரா்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளா்கள்.
கோவையில் நடைபெற உள்ள மாநில சப்ஜுனியா் கபடிப் போட்டிக்குத் தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் அளிக்கப்பட்டு வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
கோவையில், வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான சப்ஜுனியா் (மிக இளையோா்) கபடிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட மாவட்ட அமெச்சூா் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட வீரா்களுக்கு திருமயம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சியாளா் சேதுபாஸ்கரா, வேளாண்மை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முகமது இலியாஸ் ஆகியோா் அளித்து வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
நிகழ்வில் மாவட்ட அமெச்சூா் கழக செயலா் ஜாபா் அலி, திருமயம் காவல் உதவி ஆய்வாளா் சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.