கிணற்றில் தவறிவிழுந்து விவசாயி பலி
By DIN | Published On : 19th July 2020 09:03 AM | Last Updated : 19th July 2020 09:03 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகே விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் லெட்சுமிபுரம் தெற்கு தெருவைச்சோ்ந்த கருப்பையன் மகன் மலையப்பன் (55) விவசாயி. இவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச்சென்ற போது கால்தவறி கிணற்றில் விழுந்துள்ளாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குவந்து கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு மேலே கொண்டுவந்தனா். ஆதனக்கோட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.