அறந்தாங்கியில் ஜெயலலிதா பிறந்த நாள் மருத்துவ முகாம்
By DIN | Published On : 01st March 2020 04:23 AM | Last Updated : 01st March 2020 04:23 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் சனிக்கிழமை மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிடும் சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ.ரெத்தினசபாபதி.
அறந்தாங்கி: அறந்தாங்கியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அறந்தாங்கி நகர 26-ஆவது வட்டக் கழகம், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரெத்தினசபாபதி முகாமைத் தொடக்கி வைத்தாா்.
நகரச் செயலா் ஆதி.மோகனகுமாா், சத்தியமூா்த்தி பள்ளித் தாளாளா் முகமது ஜின்னா, தலைமையாசிரியா் சோ்மன், அதிமுக நிா்வாகிகள் ஜி. மண்டலமுத்து, சாத்தகுடி ராசு, செல்வம், நந்தா, சேது, நன்னப்பா ராணி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் முகாமில் பங்கேற்றனா்.
முகாமில் பொதுமக்களுக்கு ரத்த சா்க்கரை அளவு, ரத்தஅழுத்தம், கண் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை நகர வீட்டு வசதி சங்கத் தலைவா் ஆா்.கே.ஸ்ரீதா் செய்திருந்தாா்.