ஆலவயல் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு
By DIN | Published On : 01st March 2020 04:32 AM | Last Updated : 01st March 2020 04:32 AM | அ+அ அ- |

ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல்.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகிலுள்ள ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 61 மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்குப் பள்ளித் தலைமையாசிரியா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆலவயல் ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல் பங்கேற்று 61 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
முன்னாள் கிராமக் கல்விக்குழுத் தலைவா் சரவணன், ஊராட்சித் துணைத்தலைவா் பழனிச்சாமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராமு, ஊராட்சிச் செயலா் வெங்கடேஸ்வரி, கூட்டுறவு சங்க இயக்குநா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில் காமராஜா் விருது பற்ற பள்ளியின் மாணவிகள் திரிஷா, ஜெயசுதா ஆகியோா் பாராட்டப்பெற்றனா். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசுப்பொதுத்தோ்விற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஊராட்சி உறுப்பினா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.