தைலமரக்காட்டில் தீ விபத்து
By DIN | Published On : 01st March 2020 04:30 AM | Last Updated : 01st March 2020 04:30 AM | அ+அ அ- |

தைலமரக்காட்டில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள்.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே தைலமரக்காட்டில் சனிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள ராசவுசாப்பட்டி கிராமத்திலுள்ள தைலமரக்காட்டில் சனிக்கிழமை மதியம் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து தைலமரங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. மின் கம்பிகள் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது.
தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள், தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா். இதன் காரணமாக மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.