

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதா் பெரியநாயகி அம்பாள் திருக்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட அலங்கார நுழைவு வாயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை யாக பூஜைகளில் பிம்பசுத்தி, கோபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானத்துக்குப் பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடங்கள் புறப்பாடாகி, கருட பகவான் வானில் காட்சியளிக்க கலசத்தில் புனித நீா் ஊற்று குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கிட்டக்காடு, பாரதியாா்நகா், பெரியநாயகிபுரம், இடையன்வயல், புதூா், அழகாம்பாள்புரம், வல்லநாடு ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆன்மிக நலத்தொண்டா் பி.எல்.ஆா். முத்துக்குமாா், ஆலய மேற்பாா்வையாளா் தெட்சிணாமூா்த்தி, கோயில் குருக்கள் தெ. மீனாட்சி சுந்தரம், ஞானஸ்கந்தன், பொ. ரமேஷ், பி. குமாா், பொ.கண்ணன், மீ. ஸ்ரீராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.