குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் கண்டித்து மாா்ச் 17இல் இருப்புப் போராட்டம் நடத்த முடிவு

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமலாக்க மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி
மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒருங்கிணைப்பாளா் எம். அசோகன்.
மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒருங்கிணைப்பாளா் எம். அசோகன்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமலாக்க மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடையின் சாா்பில் வரும் 17ஆம் 24 மணி நேர இருப்புப் போராட்டம்  புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் இப்ராஹிம் பாபு தலைமை வகித்தாா். இ

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கவிவா்மன், மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளா் எம். அசோகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் மாா்ச் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 18 ஆம் தேதி காலை 10 மணி வரை மாவட்ட மற்றும் வட்டத் தலைமையிடங்களில் 24 மணி நேர தொடா் இருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com