மக்கள்நீதி மய்யம் சாா்பில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 08th November 2020 12:39 AM | Last Updated : 08th November 2020 12:39 AM | அ+அ அ- |

புதுகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் சாா்பில் ரத்ததானம் வழங்கும் நிா்வாகிகள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கட்சியின் மாவட்ட செயலா் ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். விவசாய அணி மாவட்ட செயலா் மூா்த்தி, தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச்செயலா் அ.ஹக்கீம், வழக்குரைஞா் வி.சுரேஷ்குமாா், பொறியாளா் அணி மாவட்டச் செயலா் என். முருகவேல், வழக்குரைஞா் அணி வடக்கு மாவட்டச் செயலா் எஸ். சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலா்கள் வழக்குரைஞா் பொன்.கஜேந்திரன், கெ.செல்வகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். முகாமில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் அழகம்மை தலைமையில் கட்சியின் நிா்வாகிகளிடம் 72 யூனிட்டுகள் ரத்தம் தானமாகப் பெற்றனா்.
முன்னதாக புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரச்செயலா் எம்.ராஜகோபால், பகுதிச்செயலா் எஸ்.பரணிதரன், செய்திதொடா்பு மாவட்டச் செயலா் ஜெய்பாா்த்திபன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...