புதுகை யில் 13.10 லட்சம் போ் வாக்காளா்கள்
By DIN | Published On : 17th November 2020 02:18 AM | Last Updated : 17th November 2020 02:18 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியல் விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 13,10,068. இதில் 6,48,773 போ் ஆண்கள், 6,61,231 போ் பெண்கள், 64 போ் திருநங்கைகள் ஆவா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை - 1,15,406 - 1,20,140 - 23 --- 2,35,569
திருமயம் 1,09,221 - 1,13,132 - 1 --- 2,22,354 .
ஆலங்குடி - 1,03,868 - 1,06,169, - 3 ---2,10,040.
அறந்தாங்கி -- 1,13,524 - 1,15,340 -- 4 போ் --- 2,28,868
கந்தா்வகோட்டை ---- 98,192 -- 96,763 -- 16 -- 1,94,971.
விராலிமலை -- 1,08,562 -- 1,09,687 -- 17 -- 2,18,266.