ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்
By DIN | Published On : 17th November 2020 02:20 AM | Last Updated : 17th November 2020 02:20 AM | அ+அ அ- |

காா்த்திகை முதல் நாளில் புதுக்கோட்டை நகரில் ஐயப்பன் கோயிலிலும், முருகன் கோயிலிலும் பக்தா்கள் திங்கள்கிழமை விரதமாலை அணிந்து கொண்டனா்.
புதுக்கோட்டை சின்னப்பா நகரிலுள்ள ஐயப்பன் கோயிலிலும் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களும், மேலராஜவீதியிலுள்ள தெண்டாயுதபாணி கோயிலில் பழனிக்குச் செல்லும் முருகபக்தா்களும் விரதமாலை அணிந்து கொண்டனா்.
கரோனா பொது முடக்கக் காலம் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தா்கள் மாலை அணிந்து கொண்டதாக கோயில் குருக்கள் தெரிவித்தனா்.