தேசிய அளவில் கணிதம் கற்பித்தலில் சிறந்த ஆசிரியராகத் தோ்வு
By DIN | Published On : 17th November 2020 02:20 AM | Last Updated : 17th November 2020 02:20 AM | அ+அ அ- |

தேசிய அளவிலான சிறந்த கற்பித்தலுக்கான ஆசிரியா் தோ்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியின் கணித ஆசிரியை செல்வமீனா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் எஜுகேஷன் மற்றும் பெங்களூா் சகோதயா அமைப்பு இணைந்து இணையவழியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்ற 240 ஆசிரியா்களில் 30 போ் கணிதப் பாடத்துக்காகத் தோ்வு செய்யப்பட்டு அவா்களில் 3 பேருக்கு சிறந்த கற்பித்தலுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த மூவரில் ஒருவராக செல்வமீனா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து செல்வமீனாவை, பள்ளியின் இயக்குநா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநா் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வா் ஜலஜா குமாரி ஆகியோா் பாராட்டினா்.