160 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் 5 போ் கைது
By DIN | Published On : 03rd October 2020 11:47 PM | Last Updated : 03rd October 2020 11:47 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் அருகே 160 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பிடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல்லில் அண்மையில் 40 கிலோ கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்த மாவட்ட போலீஸாா், இதுதொடா்பான விசாரணையில் புதுக்கோட்டைக்கு வந்தனா். மாவட்டக் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சோதனையில் 160 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பிடிபட்டன. இதில், அரிமளம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் என்பவா் கைது செய்யப்பட்டாா். தொடா் விசாரணையில், ஆரோக்கியதாஸின் மனைவி சிவகாமி (40), மகன் ஆனந்த் (22) மற்றும் ராஜேந்திரன் மகன் ஆன்ட்ரூஸ் (22), அறந்தாங்கி சின்னஅண்ணாநகரைச் சோ்ந்த ராமு மனைவி சகுந்தலா (32), மணமேல்குடி வட்டம் கானாடு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (38) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.