கறம்பக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2020 11:38 PM | Last Updated : 11th September 2020 11:38 PM | அ+அ அ- |

ஆலங்குடி : நீட் தோ்வுக்கு நுழைவுச் சீட்டு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட களபம் கிராமத்தைச் சோ்ந்த மாணவி கரிஷ்மாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கறம்பக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் கட்சியின் ஒன்றியச்செயலா் பாலசுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச்செயலா் எஸ்.கவிவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.