ஆலங்குடி வாரச்சந்தைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 11th September 2020 06:25 AM | Last Updated : 11th September 2020 06:25 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வாரச்சந்தையை திறக்க அனுமதி வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா பரவலை தடுக்கும் விதமாக மாா்ச் 24 முதல் பிரதான வாரச்சந்தைகள் மூடப்பட்டன. தற்போது, பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை வாரச்சந்தைக்கு மட்டும் செப்டம்பா் 11 முதல் இயங்க அனுமதி வழங்குவதாக நகராட்சி ஆணையா் ஜஹாங்கிா் பாஷா தெரிவித்துள்ளாா். இந்நிலையில், ஆலங்குடி வாரச்சந்தையை திறக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. அதனால், ஆலங்குடி வாரச்சந்தையில் கடை போடும் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா். இதனால், உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி ஆலங்குடி வாரச்சந்தையை திறக்க அனுமதி வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.