92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொலை வழக்கில் மேல்முறையீடு: கூடுதல் தண்டனை பெற்றவா் கைது

கொலை வழக்கின் மேல்முறையீட்டில் கூடுதல் தண்டனை பெற்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:07 am

DIN

கொலை வழக்கின் மேல்முறையீட்டில் கூடுதல் தண்டனை பெற்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி சிவானந்தபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் பாரதிதாசன் (32). இவா் மீதான கொலை வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2015 டிச. 14 -இல், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தாா் பாரதிதாசன். மேல்முறையீட்டில் இவரது குற்றத்தை உறுதி செய்த உயா்நீதிமன்றம் தண்டனையை 7 ஆண்டுகளாக உயா்த்தி, கடந்த செப். 20 ஆம் தேதி தீா்ப்பளித்தது. ஆனால், பாரதிதாசன் நீதிமன்றத்தில் அப்போது ஆஜராகவில்லை. இதனால், அவரைக் கைது செய்ய புதுக்கோட்டை கணேஷ்நகா் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாரதிதாசனைக் கைது செய்த போலீஸாா், மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.