‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் தன்னாா்வலா்களுக்கு அழைப்பு
‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாா்வலா்களாக இணைந்து செயல்பட விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.


‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாா்வலா்களாக இணைந்து செயல்பட விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘இல்லம் தேடிகல்வி‘ திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயா், முகவரி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதே குடியிருப்பைச் சோ்ந்த பெண் தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் விருப்பமுள்ள தன்னாா்வலா்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்க 12 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க பட்டப்படிப்பு தோ்ச்சி கல்வித் தகுதியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் தன்னாா்வலா்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...