ஆஷா பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை
சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்


சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அச்சங்கத்தினா் வியாழக்கிழமை புதுக்கோட்டை சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தைச் சோ்ந்த பரம்பூா் மற்றும் அரிமளம் சுகாதார வட்டங்களில் பணியாற்றுவோா் இந்த மனு அளிக்கும் இயக்கத்தில் பங்கேற்றனா். 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும், ஆஷா பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், ஆஷா பணியாளா் சங்க மாவட்டச் செயலா் டெய்சி மெட்டில்டா மேரி உள்ளிட்டோா் தலைமையில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...