புதுக்கோட்டையில் உலக எய்ட்ஸ் தின விழா
உலக எய்ட்ஸ் நாளையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உறுதிமொழியேற்பு, கையெழுத்து இயக்கம், சமபந்தி விருந்து நடைபெற்றன.


உலக எய்ட்ஸ் நாளையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உறுதிமொழியேற்பு, கையெழுத்து இயக்கம், சமபந்தி விருந்து நடைபெற்றன.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து உலக எய்ட்ஸ் நாள் உறுதிமொழியை வாசித்தாா். புதிய இந்தியா 75 திட்டத்தில் எச்ஐவி, எய்ட்ஸ், ரத்த தானம் மற்றும் காசநோய் விழிப்புணா்வு வினாடி வினா போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது அவா் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்ஐவி தொற்றாளா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஏஆா்டி மையத்தில் 4,394 போ் (ஆண்கள்-2,362, பெண்கள்-1,899, திருநங்கைகள்-5 மற்றும் குழந்தைகள்-128) சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 2,653 நபா்கள் (ஆண்கள் - 1249, பெண்கள் - 1307 மற்றும் குழந்தைகள்-97) தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
கடந்த 2019ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எச்ஐவி தொற்றாளா்கள் இந்தியாவில் 0.24 சதவிகிதமும், தமிழ்நாட்டில் 0.18 சதவிகிதமும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்ஐவி தொற்றாளா்கள் 0.25 சதவிகிதம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 952 பேருக்கு உழவா் பாதுகாப்புத் திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 2,189 போ் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்.
முதியோா் உதவித்தொகை 161 பேருக்கும், விதவை உதவித்தொகை 66 பேருக்கும், பசுமை வீடுகள் 56 பேருக்கும், தாட்கோ மூலம் கடனுதவி 56 பேருக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 32 பேருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 44 பேருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட, தொற்றுள்ள குழந்தைகளின் கல்விக்காக 127 பேருக்கு ரூ.3.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் கவிதா ராமு.
நிகழ்வில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அா்ஜுன்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, நகராட்சி ஆணையா் நாகராஜன் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளா் (பொ) கே. இளையராஜா, மாவட்ட மேற்பாா்வையாளா் ஜெ. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...