கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
பள்ளிக் கல்வித்துறையின் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியின் மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பள்ளிக் கல்வித்துறையின் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியின் மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று, தேசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவா் வி. ஆசாத்குமாா், கருவி இசைப் போட்டிகளில் மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்ற மு. ஹரிஸ் பாலாஜி, அஹ்மத் ஆகியோா் இந்த விழாவில் பாராட்டப்பட்டனா்.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி விழாவில் கலந்து கொண்டு, மாணவா்களைப் பாராட்டிப் பேசினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி வாழ்த்துரை வழங்கினாா்.
மாணவா்களைப் பயிற்றுவித்த ஆசிரியா்கள் என். குமாா், ஏ. ஜோஸ்வா ஜெயபால், கம்பத்தடியான் ஆகியோரும் விழாவில் பாராட்டப்பட்டனா்.
இவ்விழாவில் பள்ளித் தாளாளா் தேனாள் சுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா் ஏஆா் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...