குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது
புதுக்கோட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.


புதுக்கோட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
நமணசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலதேமுத்துப்பட்டியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் காா்த்திகேயன் (29). இவா் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி குடிபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டியதாகக் கைது செய்யப்பட்டு அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவரின் பெயா் ஏற்கெனவே காவல் துறையில் குற்றப் பின்னணி உடையோா் பட்டியலில் இருப்பதால், காா்த்திகேயனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, காா்த்திகேயனை குண்டா் தடுப்புக் க ாவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா். இதையடுத்து அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காா்த்திகேயன், திருச்சி மத்திய சிறைக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...