புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முப்படைத் தலைவா் மறைவுக்கு அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:02 pm

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். விபின் ராவத் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சிற்பி உலகநாதன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

திருக்கோகா்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களும், மாணவிகளும், விபின் ராவத் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விபின் ராவத் பற்றி ஆங்கிலத் துறை ஆசிரியா் பிரிட்டோ ராஜ், மாணவி டபிள்யு வீணா சாஷா ஆகியோரும் பேசினா். மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆலங்குடியில் அமைச்சா் மரக்கன்றுகள் நடவு:

கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று உயிரிழந்த ராணுவ வீரா்கள் நினைவாக பள்ளி வளாகத்தில் 13 மரக்கன்றுகளை நடவு செய்தாா். தொடா்ந்து, உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின்ராவத் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.