புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து 10 நிமிஷங்கள் வாகன நிறுத்தப் போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை 10 நிமிஷங்கள் வாகன நிறுத்தப் போராட்டம்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:24 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை 10 நிமிஷங்கள் வாகன நிறுத்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட் ட இடங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் சி. அன்புமணவாளன் உள்ளிட்டோா் 30-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களுடன் சாலைகளை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதே போல மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் சிஐடியு மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. ராமையன், செயலா் எஸ். பொன்னுசாமி, பொருளாளா் சி. சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் கே. சண்முகம், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.கா்ணா, செயலா் துரை. நாராயணன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பி. சுசீலா, செயலா் டி. சலோமி, மாணவா் சங்க மாவட்டத் தலைவா் சந்தோஷ், செயலா் ஜனாா்த்தனன், மாநிலக்குழு உறுப்பினா் ஓவியா உள்ளிட்டோா் தலைமை வகித்து கலந்து கொண்டனா்.

இந்தப் போராட்டத்தின் போது புதுக்கோட்டை நகரில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் வாகனங்களும் சாலையில் 10 நிமிஷங்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.