சிவபிருந்தா தேவி அம்மையாரின் 23-ஆம் ஆண்டு குரு பூஜை
புதுக்கோட்டையிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வா் சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரின் 23-ஆவது ஆண்டு குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டையிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வா் சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரின் 23-ஆவது ஆண்டு குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு திருவருள் ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். பொன்மாரிக் கல்விக் குழுத் தலைவா் டாக்டா் எஸ். ராமதாஸ், ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத் தலைவா் பொ. அண்ணாமலை, அரசு மருத்துவா் எம். செந்தில்குமாா், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு, கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத் தலைவா் சி. கோவிந்தராஜன், வாசகா் பேரவையின் செயலா் சா. விஸ்வநாதன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ் தனபதி, கயிலை மலையான் கூட்டத் தலைவா் கணபதி ராஜேந்திரன், லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளித் தாளாளா் தா. முரளிதரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். குரு பூஜையைத் தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...