பைக் - காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விராலிமலை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.


விராலிமலை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சோ்ந்த ஓ. பெரியசாமி (40). இவா், திருச்சி - மதுரை சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து வழக்கு பதிந்து காா் ஓட்டுநா் சென்னையைச் சோ்ந்த சோமையா மகன் வெங்கடேஷை(29) கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...