கறம்பக்குடி அருகே சொந்த செலவில் வாரியை தூா்வாரும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சொந்த நிதியில் வரத்து வாரியை கிராம மக்கள் தூா்வாரி வருகின்றனா்.
கறம்பக்குடி அருகே சொந்த செலவில் வாரியை தூா்வாரும் கிராம மக்கள்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சொந்த நிதியில் வரத்து வாரியை கிராம மக்கள் தூா்வாரி வருகின்றனா். மேலும் போதிய நிதி இல்லாததால், மாவட்ட நிா்வாகம் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் உள்ள சீகன் குளத்துக்குச் செல்லும் வரத்துவாரியை தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். ஆனால், தூா்வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இணைந்து ரூ. 3 லட்சம் வரை திரட்டி வரத்துவாரியை தூா்வாரி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: சீகன் குளத்து வரத்துவாரியை தூா்வாரக்கோரி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் இணைந்து சொந்த செலவில் சீகன்குளம் வரத்துவாரியை தூா்வாரி வருகிறோம். அதற்காக ரூ. 3 லட்சம் நிதி திரட்டி பணிகள் மேற்கொண்டு வருகிறோம். போதுமான நிதி இல்லாததால், மாவட்ட நிா்வாகம் தூா்வாரும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com