அன்னவாசல் ஒன்றியம், பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆா்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஆயுஷ் மருத்துவா் த. சுயமரியாதை அங்கு பணிபுரியும் செவிலியா்கள், கிராமப்புற செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ஆா்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கினாா்.
நிகழ்வுக்கு, பிறகு ஆயுஷ் மருத்துவா் த. சுயமரியாதை மேலும் கூறியது: பொதுமக்கள் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஆா்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட பெரியவா்கள் 5 மாத்திரைகள், 5 வயது முதல் 12 வயது வரை உள்ளவா்கள் 3 மாத்திரைகள், 5 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் 2 மாத்திரைகள் நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இம் மாத்திரைகளை தொடா்ச்சியாக 3 நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னா் மேலும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்த மாத்திரை உட்கொண்ட 3 வாரங்களுக்கு பின்பு இதேபோல் தொடா்ச்சியாக 3 நாட்களுக்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வின்போது மருத்துவா் சௌந்தா்யா, பல் மருத்துவா் நிஷா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.