92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எளம்பலூரில் இன்று அன்னை சித்தா் முதலாமாண்டு குருபூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:49 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

பெரம்பலூா் பிரம்ம ரிஷி மலை காக புஜண்டா் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள், மகா சித்தா்கள் அறக்கட்டளை தொடங்கி, பிரம்ம ரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னை ஈஸ்வரா் சித்தா் கோயிலை ஸ்தாபித்து, ஆசிரமம் அமைத்து ஆன்மிக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தா்ம காரியங்கள் செய்து வந்தாா். கடந்த ஆண்டு ஆடி மாதம் பெளா்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்தாா். அவரது முதலாமாண்டு குரு பூஜை விழா சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

விழாவையொட்டி திருவருள்பா பாராயணம், கோபூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தா்கள் யாக பூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம், சாதுக்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, இயக்குநா்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.