

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக் காவடி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப்பெருந்திருவிழா சனிக்கிழமை பூத்திருவிழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அக்கினிக்காவடி விழா நடைபெற்றது.
விழாவில் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த 14 அக்கினிக் குண்டங்களில் ஆலவயல், கண்டியாநத்தம்-தூத்தூா், மூலங்குடி, கொன்னைப்பட்டி உள்ளிட்ட 14 கிராம பொதுமக்கள் பால் குடம் மற்றும் காவடி ஏந்தி இறங்கி தங்களது நோ்த்திக்கடனைக் செலுத்தினா். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் தலைமையிலான காவல்துறையினா் செய்திருந்தனா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனா். விழாவையொட்டி அரசுப்போக்குரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆங்காங்கே தண்ணீா் பந்தல்கள் அமைத்து
பக்தா்களுக்கு நீா் மோா், பானகம், தண்ணீா் வழங்கப்பட்டது. வரும் 28 ஆம் தேதி பொங்கல் விழா மற்றும் 29-இல் நாடு செலுத்தும் விழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.