

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன், பெண்களுடன் வயலில் நாற்று நடவு செய்து புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
இத்தொகுதிக்குள்பட்ட பாச்சிக்கோட்டை, குளவாய்ப்பட்டி, கல்லாலங்குடி, சிக்கப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது பாச்சிக்கோட்டையில் வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்த அவா், வயலில் இறங்கி பெண்களோடு சோ்ந்து நாற்று நடவு செய்தாா். அப்போது நடவு செய்து கொண்டிருந்த பெண்கள் களைப்பாற பாடும் கிராமியப் பாடலில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பாடல் வரிகளில் சோ்த்து பாடல் பாடினாா் திமுக வேட்பாளா் சிவ.வீ. மெய்யநாதன். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பெண்களிடம் வேட்பாளா் வாக்குறுதி அளித்தாா்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலா்கள் ஞான.இளங்கோவன், தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச்செயலா் த.செங்கோடன், ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.