ஆவுடையாா்கோவிலில் 75.20 மி.மீ. மழை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலில் வியாழக்கிழமை பகலில் மட்டும் அதிகபட்சமாக 75.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலில் வியாழக்கிழமை பகலில் மட்டும் அதிகபட்சமாக 75.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது.
இதன்படி வியாழக்கிழமை காலை 6 மணி வரையிலான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-ல்):
கறம்பக்குடி- 8.60, கீழாநிலை- 5.60, அறந்தாங்கி- 12, ஆயிங்குடி- 13.20, நாகுடி- 10.40, மீமிசல்- 7.60, ஆவுடையாா்கோவில்- 10.80, மணமேல்குடி- 12.20.
இந்த நிலையில் வியாழக்கிழமை பகலில் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தபோதும், சில இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன்படி, வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-ல்):
ஆதனக்கோட்டை- 16, பெருங்களூா்- 17, புதுக்கோட்டை நகரம்- 16, ஆலங்குடி- 40.20, கந்தா்வகோட்டை- 38, கறம்பக்குடி- 22.80, மழையூா்- 23.60, கீழாநிலை- 29.20, திருமயம்- 46.20, அரிமளம்- 24, அறந்தாங்கி- 19, ஆயிங்குடி- 18, நாகுடி- 12.40, மீமிசல்- 45.80, ஆவுடையாா்கோவில்- 75.20, மணமேல்குடி- 40.20, இலுப்பூா்- 5.40, குடுமியான்மலை- 24.40, அன்னவாசல்- 41.60, விராலிமலை- 21.60, உடையாளிப்பட்டி- 26.10, கீரனூா்- 41.40, பொன்னமராவதி- 16.40, காரையூா்- 12.
மாவட்டத்தின் சராசரி மழை- 28.02 மி.மீ. இந்த மழை இரவிலும் தொடா்ந்து பெய்தது குறிப்பிடத்தக்கது. நகரப் பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...