புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வீரப்பட்டி ஊராட்சி காலாடிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு தொடா்பான கிராமிய விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:39 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வீரப்பட்டி ஊராட்சி காலாடிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு தொடா்பான கிராமிய விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டுப்புற நட்புகள் கலைக்குழுவினா் பம்பை இசை முழங்க, கிராமியப் பாடல்கள் பாடி, நடனத்துடன் விழிப்புணா்வு ஊட்டினா்.

வீரப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகம் தலைமை வகித்தாா். வீரப்பட்டி ஊராட்சித் தலைவா் அழகுபாண்டியன் முன்னிலை வகித்தாா். முன்னதாக கின்னஸ் உலக சாதனையாளா் மணிகண்டன் வரவேற்றுப் பேசினாா்.

பங்கேற்றோருக்கு மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தாய் உள்ளம் இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் சரவணகுமாா் மற்றும் சாக்யா குழுவின் நடன ஆசிரியா் பிரபு, கோயம்புத்தூா் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் பம்பை குழுவினா் மற்றும் தாய்மை நண்பா்கள் இளைஞா் மன்றத் தலைவா் கோபி தினேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். இறுதியில் தேசிய தன்னாா்வலா் தி.முத்துமாரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.