92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சை, புதுகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடா் மழை காரணமாக, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:38 pm

DIN

தொடா் மழை காரணமாக, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.

தொடா் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக பல இடங்களிலும் பகலில் விட்டுவிட்டு மழை பெய்தது.

மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், புதுகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 26) அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இதேபோல், தஞ்சாவூா் மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.