புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனைத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:50 pm

DIN

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களோடு மின்சார திருத்தச் சட்டத்தையும் கைவிட வேண்டும். பணமாக்கும் கொள்கை என்ற எந்தப் பெயராலும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது.

அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ.ஸ்ரீதா், தொமுச மாவட்டத் தலைவா் அ.ரெத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து மற்றும் நிா்வாகிகள் எம்.என்.ராமச்சந்திரன், எஸ். பாலசுப்பிரமணியன், சி. அன்புமணவாளன், அரு. வீரமணி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.