92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தில்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடத்தும் டிராக்டா் பேரணிக்கு ஆதரவாக, புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:53 pm

DIN

தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடத்தும் டிராக்டா் பேரணிக்கு ஆதரவாக, புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதோடு, மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, தில்லியில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை டிராக்டா் பேரணி நடத்தினா்.

இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ராமையன், ராஜாங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலா் பழ.ஆசைத்தம்பி, இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். பொன்னுசாமி, மதிமுக நகரச் செயலா் அரசி. கருணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கண்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.